இணையத்தில் லீக்கான விஜய்யின் ஜனநாயகன் படம்!! கொந்தளிக்கும் ரசிகர்கள்..

Vijay Gossip Today H. Vinoth JanaNayagan
By Edward Apr 10, 2026 06:08 AM GMT
Report

ஜனநாயகன் படம்

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஜனநாயகன். பொங்கல் அன்று இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் படம் தள்ளிபோயுள்ளது.

இணையத்தில் லீக்கான விஜய்யின் ஜனநாயகன் படம்!! கொந்தளிக்கும் ரசிகர்கள்.. | Janayagan Movie Leaked Online Production Heartfelt

இதற்கான வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தணிக்கை குழுவினர் கூறினர். இதனையடுத்து படம் தேர்தல் முடிந்தப்பின் தான் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது.

சில காட்சிகள் லீக்

இந்நிலையில் நேற்று ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் சில நபர்களால் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு இணையத்தில் லீக்கானது. இதனை பலரும் இணையத்தில் பகிர்ந்து டிரெண்ட்டாக்கி வந்தனர்.

இணையத்தில் லீக்கான விஜய்யின் ஜனநாயகன் படம்!! கொந்தளிக்கும் ரசிகர்கள்.. | Janayagan Movie Leaked Online Production Heartfelt

ஆனால் இன்று முழு ஜனநாயகன் படமும் இணையத்தில் கசிந்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனையறித்த படக்குழுவினர், இதை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன் எல் எல் பி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் விஜயன் சுப்ரமணியன் என்பவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.