அன்று என் அம்மா, பரிதாபமாக.. மீம்ஸ்களால் நடிகை ஜான்விகபூர் குமுறல்!
ஜான்விகபூர்
இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார்.
சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார்.
இப்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர். ஜான்விகபூர் தொடர்ந்து பல படங்கள் நடித்து வருகிறார்.

குமுறல்!
இந்நிலையில், ஜான்விகபூர் தனது தாய் ஸ்ரீதேவி மரணம் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "என் தாயின் மரணம் குறித்து பேசி நான் விளம்பரம் பெற முயற்சிக்கிறேன் என்று மக்கள் நினைப்பார்கள் என்ற பயத்தில் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச நான் பலமுறை தயங்கி இருக்கிறேன்.
அந்த நேரத்தில் நான் அனுபவித்த வலி அளவிட முடியாதவை. அவற்றை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தர்மேந்திரா இறந்தபோது கூட, பலர் பல வகையான செய்திகளை உருவாக்கினர்.
ஒருவரின் மரணத்தை மீம்ஸாக மாற்றுவது மிகவும் பரிதாபமான ஒன்று. இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாக சென்று கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.