நடிகை ஸ்ரீதேவியின் அழகின் ரகசியம் இதுதானா.. மகள் ஜான்வி கபூர் சொன்ன சீக்ரெட்

Sridevi Janhvi Kapoor
By Kathick Jan 29, 2026 02:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். இவர், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார்.

இவர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்த தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய திரைப்படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அடுத்ததாக பெத்தி திரைப்படம் தெலுங்கில் வெளிவரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவியின் அழகின் ரகசியம் இதுதானா.. மகள் ஜான்வி கபூர் சொன்ன சீக்ரெட் | Janhvi Kapoor About Sridevi Beauty Secrets

80ஸ் காலகட்டத்தில் மிகவும் அழகிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய அழகு மற்றும் இளமையின் ரகசியம் என்னவாக இருக்கும் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. இந்த நிலையில், தனது அம்மாவின் அழகின் ரகசியம் குறித்து நடிகை ஜான்வி கபூர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இதில் "எங்கள் வீட்டில் காலை உணவில் பழங்கள் தவறாமல் இடம்பெறும். மீதமிருக்கும் பழங்களை ஜூஸாக்கி அம்மா முகத்தில் தேய்த்துக்கொள்வார். சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று மாறிவிடும். இந்த பழக்கத்தை அம்மா தொடர்ந்து கடைப்பிடித்தார்" என தெரிவித்துள்ளார்.