கியாரா டூ ஜான்வி கபூர்! ஸ்ரீதேவி மகளுடன் பேரிஸ்-க்கு விமானத்தில் பறந்த பிரபல நடிகர்

Sridevi Janhvi Kapoor
By Edward May 29, 2022 08:35 AM GMT
Report

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை என்ற இடத்தினை பெற்று வருபவர் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர். நடிகை ஸ்ரீதேவி மறைந்த பிறகு அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.

அதன்பின் சில படங்களில் ஐட்டம் பாடலுக்கும் குத்தாட்டம் போட்டுள்ளார். கோஸ்ட் ஸ்டோரிஸ், Gunjan Saxena: The Kargil Girl, ரோஹி போன்ற படங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பு கொடுத்தது. இதையடுத்து குட் லக் ஜெர்ரி, மில், மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மஹி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகை வருண் தவானுடன் பாவல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் ஜான்வி கபூர். வருண் தவான், கியாரா அத்வானி நடிப்பில் சமீபத்தில் Bhool Bhulaiyaa 2 படத்தில் நடித்து 100 கோடி வசூலை தாண்டி பெற்று வருகிறது.

இப்படத்தினை தொடர்ந்து பாவல் படத்தில் நடிக்கவுள்ளார். அதற்காக ஜான்வி கபூருடம், வருண் தவானும் பார்ஸ் படப்பிடிப்பிற்கு செல்ல மும்பை விமானநிலையத்திற்கு ஜோடியாக வந்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.