ராஷ்மிகாவிற்கு போட்டியாக களமிறங்கும் ஜான்வி கபூர்? எந்த விஷயத்தில் தெரியுமா?
பான் இந்தியா நடிகையாக மாறி இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. முன்னணி நடிகரான விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற 11-ம் தேதி வெளியாவது நாம் அறிந்ததே.
மேலும் இவர் விஜய் தேவரகொண்டா படத்தின் மூலம் பிரபலமாகி, அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, மற்றும் ஹிந்தியில் ரன்பீர் கபூரின் அனிமல் போன்ற படங்களில் நடிக்கவுள்ளார். இவை அனைத்தும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்.

போட்டி
இவர் நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் இருந்து ராஷ்மிகா சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தினார். விஜய்யின் வாரிசு படத்திற்கு இந்த தொகையை தான் வாங்கினார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது என ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
தற்போது தென்னிந்திய படத்தில் நடிக்க துவங்க இருக்கும் ஜான்வி, நடிகை ராஷ்மிகாவிற்கு போட்டியாக சம்பளத்தை கேட்கிறார். அதாவது ராஷ்மிகா மந்தனா தற்போது 3 முதல் 5 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். ஆனால் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிய முதல் படத்திலேயே ஜான்வி கபூர் 5 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம்.
இந்த விசயம் தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கு இல்லாத நடிகைகள் கூட 1 கோடிக்கு கீழ் வாங்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்க ஏன் மார்க்கெட் இல்லாத ஒரு வாரிசு நடிகை என்று விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
