நடிகருடன் திடீர் திருமணமா? விளம்பரமா? ஜான்வி கபூரின் வீடியோ வைரல்...
ஜான்வி கபூர்
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் பெத்தி திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.
பாலிவுட் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஜான்வி கபூர் விரைவில் தமிழில் என்ட்ரி கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் இஷான் கட்டருடன் திருமண கோலத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்தார். ஜான்வி - இஷான் இருவரும் தடக் படத்தின் மூலம் இணைந்து நடித்து பின் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
திடீரென இருவரும் திருமண கோலத்தில் எடுத்த வீடியோவால் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இந்த வீடியோ உண்மையான திருமண நிகழ்வு கிடையாது, கல்கி ஃபேஷனின் புதிய பிரைடல் கலெக்ஷனை விளம்பரப்படுத்த உருவாக்கப்பட்ட வீடியோ தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.