அம்மா அப்பவே சொன்னாங்க.. மறைந்த ஸ்ரீதேவி எச்சரித்தும் மகள்கள் செய்த காரியம்..

Sridevi Janhvi Kapoor Bollywood Boney Kapoor
1 மாதம் முன்
Edward

Edward

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காளி, கன்னடம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார் ஸ்ரீதேவி.

அம்மா அப்பவே சொன்னாங்க.. மறைந்த ஸ்ரீதேவி எச்சரித்தும் மகள்கள் செய்த காரியம்.. | Janhvi Kapoor Mother Sridevi Reaction Her Acting

இந்தியளவில் அபிதாப் பச்சனையே முந்தும் அளவிற்கு அவரது சம்பளம் இருந்தது. அப்படி இருந்த ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு துபாய்யில் மர்மமான முறையில் ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார். ஸ்ரீதேவி மறைவதற்கு முன் தன் இருமகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

ஆனால் நடிக்க வைக்கவில்லை. இதனையடுத்து ஸ்ரீதேவி இருக்கும் போதே ஜான்வி கபூர் அம்மாவை மீறி தடக் படத்தில் கமிட்டாகி நடித்தார். ஆனால் படம் வெளியாகும் முன்பே ஸ்ரீதேவி மறைந்துவிட்டார். இதுகுறித்து ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், என் அம்மா அப்பவே சொன்னாங்க.

அம்மா அப்பவே சொன்னாங்க.. மறைந்த ஸ்ரீதேவி எச்சரித்தும் மகள்கள் செய்த காரியம்.. | Janhvi Kapoor Mother Sridevi Reaction Her Acting

நான் நடிக்கப்போகிறேன் என்று அம்மாவிடம் கூறியபோது, வேண்டாம் என்று கூறினார். நடிப்பு அவ்வளவு சுலபமானது கிடையாது என்று தெரிந்தும் ஏன் நடிகையாக விரும்புகிறாய். என்னுடைய 300 படத்தினை வைத்து உன்னுடைய 1 படத்தை கம்பேர் செய்து விமர்சிப்பார்கள்.

அதை எப்படி சமாளிக்க போகிறாய் என்றும் இதுபற்றி விரைவில் காயப்படுவாய். நீ அப்படி ஆவதை என்னால் முடியாது என்று அம்மா கூறினார்கள் என்று ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

படங்கள் மீதான ஈர்ப்பால் அம்மாவின் பேச்சை கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் ஜான்வி. அதேபோல் தான் தடக் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவியின் நடிப்போடு ஜான்வி கபூரின் நடிப்பை ஒப்பிட்டு விமர்சித்தார்கள் அப்போதைய ஊடகங்கள்.

Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.