அம்மா இறப்பிற்கு பின், ஒருவருக்கொருவர் நெருக்கமானோம்.. நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்

Sridevi Janhvi Kapoor Actress
By Bhavya May 11, 2025 10:30 AM GMT
Report

ஜான்வி கபூர்

பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் ஹீரோயினாக வலம் வருகிறார் ஜான்வி கபூர்.

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் Dhadak என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர்.

அம்மா இறப்பிற்கு பின், ஒருவருக்கொருவர் நெருக்கமானோம்.. நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக் | Janhvi Open Up About Her Mother And Family

நெருக்கமானோம்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தன் தாயின் மறைவுக்குப் பின் நடந்தவற்றை குறித்து நடிகை ஜான்வி கபூர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " என் அம்மா இறப்பிற்கு பின் எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமானோம். என் தந்தை மற்றும் தங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.

குறிப்பாக குஷி, அவள் மிகவும் இளையவள், அவளைப் பாதுகாக்க வேண்டும், அவளுக்கு தைரியம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.  

அம்மா இறப்பிற்கு பின், ஒருவருக்கொருவர் நெருக்கமானோம்.. நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக் | Janhvi Open Up About Her Mother And Family