காதல் தோல்வியாகி ஒன்றரை வருடமாச்சி!! விஜய் - சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்..
சிக்மா படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் விஜய் - சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய். நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி நேற்று திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் சிக்மா படம் வெளியாகியுள்ள நிலையில், படத்தை பார்க்க ஜேசன் சஞ்சய்யின் அம்மா சங்கீதா மற்றும் தங்கை திவ்யா சாஷா, கமலா திரையரங்கிற்கு வந்து சிக்மா படத்தை கண்டு களித்தனர்.
இந்நிலையில் விஜே சித்துவின் யூடியூப் சேனலுக்கு மொட்டை மாடி பார்ட்டியில் கலந்து கொண்ட ஜேசன், பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

காதல் தோல்வி
அதிலும், கல்லூரி படிக்கும்போது நான் காதல் செய்து கொண்டிருந்தேன். மொத்தம் ஒன்றரை வருடங்கள் அந்த உறவில் இருந்தேன். பின் இரண்டு பேரும் சுமூகமாக பேசி பிரிந்துவிட்டோம்.
காதல் தோல்வியடைந்த சமயத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் காதல் பாடல்களைத்தான் கேட்டுக் கொண்டிருப்பேன். அதன்பின் வாழ்க்கையை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் என்று ஜேசன் வெளிப்படையாக பேசியுள்ளார்.