கமல் படத்தையே ஆட்டை போட்ட அட்லீ!! பாலிவுட்டில் அசிங்கப்படபோகும் ஷாருக்கான்..
இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற மிகப்பெரிய ஹிட் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அட்லீ. இப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து தமிழில் யாரும் வாய்ப்பு கொடுக்காததால் பாலிவுட் பக்கம் சென்று கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தினை இயக்கி வருகிறார். நயன் தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு போன்றவர்கள் நடிக்கும் இப்படம் ஆரம்பித்த நாளில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
கொரோனா காலத்துக்கு முன் பூஜை போடப்பட்டு தற்போது வரை படத்தின் ஷூட்டிங் சென்று கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே அட்லீ காப்பி இயக்குனர் என்ற அவப்பெயரை சம்பாதித்தவர் என்பதால் ஜவான் படமும் காப்பி படமா என்று பலர் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
பேரரசு படத்தின் காபி என்று படத்தின் தயாரிப்பாளர் புகாரளித்திருந்த நிலையில் தற்போது கமல் படத்தின் அட்டர் காப்பி என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கமல் ஹாசன் நடிப்பில் 1985ல் வெளியான ஒரு கைதியின் டைரி என்ற படத்தின் காப்பி தான் ஜவான் படம் என்று கூறப்படுகிறது. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இப்படம் கமல் அப்பா மற்றும் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பழிவாங்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தின் முக்கிய மையக்கருவை எடுத்து தான் ஜவான் படத்தினை உருவாக்கி வருகிறார் என்று அட்லீயை வசைப்பாடி வருகிறார்கள். பாலிவுட் போயும் திருந்தலையா என்று இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள். ஆனால் படத்தின் டிரைலரோ அல்லது பாடல்களோ வெளியானால் தான் அதன் உண்மை என்ன என்று தெரியவரும்.
