இனி நான் ஜெயம் ரவி இல்லை.. பெயர் மாற்றிய நடிகர்

Jayam Ravi Actors Tamil Actors
By Kathick Jan 14, 2025 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இன்று வெளிவரும் காதலிக்க நேரமில்லை திரைப்படம் இவருடைய கம் பேக் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இவருடைய விவாகரத்து விஷயமும் தற்போது போய்க்கொண்டு இருக்கிறது.

இனி நான் ஜெயம் ரவி இல்லை.. பெயர் மாற்றிய நடிகர் | Jayam Ravi Changed His Name

தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென ஜெயம் ரவி கேட்டுள்ள நிலையில், இறுதி தீர்ப்பு இன்னும் வரவில்லை. சமரச பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், "இனி என்னை ஜெயம் ரவி என யாரும் அழைக்க வேண்டாம், ரவி அல்லது ரவி மோகன் என்றே அழைக்க விரும்புகிறேன்" என அவர் கூறியுள்ளார்.

மேலும் ரவி மோகன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருப்பதாகவும் அவர் அறிவித்து உள்ளார். ரசிகர் மன்றம் இனி அறக்கட்டளையாக மாற்றப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.