உங்களுக்கும் தான் அது வெள்ளையா இருக்கு!! கேள்வி கேட்டவருக்கு பதிலடி கொடுத்த நடிகர் ஜெயம் ரவி..
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இயக்குனர் மணிரத்னம் உடன் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா போன்ற நட்சத்திரங்கள் பல பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
தற்போது மும்பையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
ஆனால் ஜெயம் ரவியிடம் என்ன கேள்வி கேட்பதென்று முழுத்த பத்திரிக்கையாளர் ஒருவர், அவரின் தலை முடி வெள்ளையாக இருப்பது பற்றி கேட்டுள்ளார்.
இந்த கேள்வி கேட்டதும் ஜெயம் ரவி, என் முடி வெள்ளையாக இருப்பது போன்று உங்கள் முடியும் வெள்ளையாக இருக்கிறது என்று காமெடியாக பதிலளித்தார்.
இதனை கேட்ட சக நடிகர் நடிகைகள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.