ஆர்த்தியுடன் விவாகரத்து!! மாமியார் சொன்னதை நிரூபிக்கும் ஜெயம் ரவி.. என்ன தெரியுமா..
ஜெயம் ரவி பிரதர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் படம் வரும் 31ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்படத்தின் பிரமோஷனுக்காக கலந்து கொண்டு வரும் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து சம்பந்தமாக கேள்வியை சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒருசில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இருவரின் விவாகரத்துக்கு காரணம் பல விதமாக பேசப்பட்டு வந்த நிலையில், என் பிரிவு குறித்து நிறைய வதந்திகள் வந்ததால் அதுகுறித்து அறிவிக்க வேண்டியதாகிவிட்டது, இல்லை என்றால் தேவையில்லை.
சினிமாக்காரங்க எதுனாலும் பண்ணும்போது அது பெரிதாக தெரியும். நாம் கடைசியில் டீ சாப்பிட்டால் கூட ஜெயம் ரவி டீ சாப்பிட்டார் என்று பேசுவார்கள்.
பொறுமையான பதில்
மக்களுக்கு சினிமா, நடிகர்கள், அவர்களை பற்றி பேசுவது பிடிக்கும் என்பதால் அவர்கள் பேசட்டும் என்று விட்டுவிட்டால் நல்லது. ஒவ்வொருத்தரிடமும் சென்று பேசமுடியாது.
என்னைப் பற்றி ஏன் அப்படி பேசுனீங்கன்னு கேட்கவும் முடியாது. நாம் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் மனதை கிளியராக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனால் வதந்திகளை கேட்டு பாதிக்கப்பட்டால் வேலை பார்க்க முடியாது என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
இப்படியான கேள்விகளுக்கு ஜெயம் ரவி பொறுமையாகவும் அழகாகவும் பதிலளித்திருப்பதை பார்த்தால், மாமியார் சுஜாதா சொன்னது சரிதானோ.
ஏனென்றால், இவர்களின் விவாகரத்துக்கு முன் சொன்னதுபோல், ஜெயம் ரவி ரொம்ப பொறுமையானவர், ஆர்த்திக்கு சட்டுன்னு கோபம் வந்திவிடும் என்று சப்போர்ட் ஆக பேசியது சரியாகத்தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.