மாமியார் தயவு இனி தேவையில்லை!! விவாகரத்துக்கு பின் ஜெட் வேகத்தில் எகிறிய ஜெயம் ரவி சம்பளம்..
ஜெயம் ரவி - ஆர்த்தி
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, சில வாரங்களுக்கு முன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து ஆர்த்தி அது அவரது தனிப்பட்ட முடிவு, அதனால் நானும் என் குழந்தைகளும் கஷ்டப்படுவதாக கூறி அறிக்கை வெளியிட்டார்.

இதுகுறித்து கோலிவுட் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாடகி ஒருவரும் ஜெயம் ரவி தொடர்பில் இருப்பதாக கூறி சில தகவல்கள் வெளியாகியது. நடிகர் ஜெயம் ரவி, நிரூபர்களை சமீபத்தில் சந்தித்து விவாகரத்து மற்றும் பாடகியுடன் தொடர்புபடுத்தி பேசுவது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.
ஜெயம் ரவி விவாகரத்து விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஜெயம் ரவி மார்க்கெட் முற்றிலுமாக சரிந்துவிடும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை, அவருடைய சம்பளம் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி கைவசம் 3 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இனிமேல் முழு கவனம் சினிமாவில் தான் இருக்கப்போவதாக கூறப்படுகிறது.

எகிறிய ஜெயம் ரவி சம்பளம்
தீபாவளி அன்று ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படம் திரைக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்து காதலிக்க நேரமில்லை, ஜீனி உள்ளிட்ட படங்களும் தயார் நிலையில் இருக்கிறது. இதன்பின் அண்ணன் மோகன் ராஜாவுடன் இணைந்து தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்கவுள்ளார் என்றும் அதில் நயன் தாரா மீண்டும் ஜோடி சேர்வார் என்றும் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து வெயிட்டான படங்கள் இருக்கையில் உதயநிதி ஸ்டாலின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்திற்காக ஜெயம் ரவி 18 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம்.
இதனை தொடர்ந்து பிரதர் படம் வெற்றி பெற்றால் ஜெயம் ரவி தன் சம்பளத்தை 25 கோடி முதல் 30 கோடி வரை உயர்த்த ரெடியாக இருக்கிறாராம். விவாகரத்து விஷயத்தில் உறுதியாக இருக்கும் ஜெயம் ரவி குடும்பத்தை தாண்டி தன் கேரியரில் கவனம் செலுத்த மும்முரமாக வேலை செய்து வருகிறாராம்.