நிறைய சண்டைகள்.. சின்ன விஷயத்துக்கு டென்ஷனாகும் ஆர்த்தி!! ஜெயம் ரவி மாமியார் ஓப்பன் டாக்..
விவாகரத்து
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, சைரன் படத்திற்கு பின் பிரதர் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், 15 வருடமாக ஆர்த்தியுடன் திருமண வாழ்க்கை வாழ்ந்து வந்தார் ஜெயம் ரவி.
சில தினங்களுக்கு தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டார். மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் 2009 ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார் ஜெயம் ரவி.
மனைவி ஆர்த்தி அறிக்கை
விவாகரத்து குறித்து மனைவி ஆர்த்தி, இது முழுக்க முழுக்க என் ஒப்புதல் இல்லாமல் வெளியான ஒன்று. என் கணவரிடம் மனம்விட்டு பேச வேண்டும், சந்திக்க வேண்டும் என பலவித முயற்சிகள் செய்ததாகவும் நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருப்பதாகவும் திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவை முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று ஆர்த்தி தெரிவித்திருந்தார்.
மாமியார் சுஜாதா ரவி
இந்நிலையில், ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா ரவி பேசிய ஒரு பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. ஜெயம் ரவியை காதலிக்கிறேன் என்று ஆர்த்தி என்னிடம் கூறியபோது உண்மையில் எனக்கு ஷாக் தான். அவர்கள் சினிமா சம்பந்தமான குடும்பம், நாங்கள் வேறு. அப்படி இருக்கும்போது எப்படி இருவரும் கனெக்ட் செய்து கொண்டார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு நிகழ்ச்சியில்தான் இருவரும் சந்தித்தபோது காதல் உருவானது.
ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையே சண்டை நடக்காமல் இருந்ததே இல்லை. நிறைய வாக்குவாதங்கள் வரும். அந்தமாதிரியான சமயத்தில் நான் ரவிக்குத்தான் சப்போர்ட் செய்வேன். அங்குதான் மேற்கொண்டு பிரச்சனையே ஏற்படும் ஆர்த்தி என்னிடம் வந்து நீ உன் மாப்பிள்ளைக்கு ஆதரவு கொடுக்கிறாயா? என்று திட்டுவாள்.
ரவி கொஞ்சம் நிதானமானவர், ஆர்த்தி அப்படி இல்லை சின்ன விஷயத்துக்கூட டென்ஷன் அவாள். அதனால் தான் ரவிக்கு சப்போர்ட் செய்வேன். அப்போது எனக்கும் ஆர்த்திக்கும் வாக்குவாதம் ஏற்படும். முதன்முதலில் ஒரு ஆண் எங்கள் வீட்டில் கால் வைத்த ஆண்மகன் என்றால் ரவி தான். எனக்கு இரு பேரன்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று சுஜாதா பேசியிருக்கிறார்.