ஆள விடுங்கடா என்று தமிழகத்தை விட்டே கிளம்பிய ஜெயம் ரவி
Jayam Ravi
By Tony
ஜெயம் ரவி
ஜெயம் ரவி கடந்த சில நாட்களாக கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். விவாகரத்து அறிக்கை விட்டதற்கு பிறகு ஆளாளுக்கு ஒரு கதையை எழுதி வருகின்றனர்.
ஜெயம் ரவி தரப்பில் தான் விவாகரத்து நோட்டிஸ் இரண்டு முறை அனுப்பி விட்டேன் என்கிறார், அவர் மனைவி ஆர்த்தி தரப்பில் அப்படி எதுவும் பெறவில்லை என்கிறார், இப்படியே பிரச்சனைகள் போகிறது.
மும்பை செட்டில்?
இந்த நிலையில் ஜெயம் ரவி இங்கிருந்தால் தான் இந்த பிரச்சனை எல்லாம் என்று, மும்பை பக்கம் வீடு எடுத்து செட்டி ஆகிவிட்டதாக ஒரு செய்தி கசிந்து வருகிறது.
சமீபத்தில் கூட ஜெயம் ரவி மும்பை ஏர்போட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்து நான் மும்பை வந்துவிட்டேன் என்று பேசியது ட்ரெண்ட் ஆகி வந்தது.
எது எப்படியோ எங்கு நிம்மதியோ அங்கே தான செல்ல முடியும்.