தயாரிப்பாளர் தலையில் துண்டைப்போட்டாரா ஜெயம் ரவி.. பிரதர் பாக்ஸ் ஆபிஸ்..

Jayam Ravi Priyanka Arul Mohan Gossip Today Brother
By Edward Nov 04, 2024 04:00 AM GMT
Report

பிரதர்

ஜெயம் ரவி ஒரு காலத்தில் மினிமம் கேரண்டி ஹீரோவாக வலம் வந்தவர். இவர் படங்கள் என்றாலே குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் சென்று வாருவார்கள்.

ஆனால், அதெல்லாம் தற்போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும், சமீபத்தில் இவர் நடித்த அனைத்து படங்களும் படு தோல்வியடைய, தீபாவளிக்கு வந்த பிரதர் படம் நல்ல கம்பேக் ஆக அமையும் என எதிர்ப்பார்த்த நிலையில், இந்த படமும் எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லையாம்.

தயாரிப்பாளர் தலையில் துண்டைப்போட்டாரா ஜெயம் ரவி.. பிரதர் பாக்ஸ் ஆபிஸ்.. | Jayam Ravi Priyanka Mohan Brother Day 4 Box Office

வசூல்

கண்டிப்பாக தீபாவளி விடுமுறை முடிந்து இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்காது என்பதே எல்லோரின் கணிப்பு. ஒரு காலத்தில் எவ்ளோ ஹிட் கொடுத்த மனிதர், இப்படியாகிட்டாரே என்று ரசிகர்களே வருத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதர் படம் ரிலீஸாகி இதுவரை வெறும் 8 கோடிகள் மட்டுமே வசூல் செய்திருக்கிறதாம். இப்படியே போனால் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு கொடுத்த சம்பள தொகைக்கூட பிரதர் படம் வசூலிக்கவில்லை என்பதால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படவுள்ளதாகவும் கூறி வருகிறார்கள்.