ஜெயம் ரவி முகத்தை பார்த்து கலாய்த்து தள்ளிய பிரபல நடிகை!! யார் தெரியுமா?
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். ஆனால் இதில் எனக்கு உடன்பாடில்லை, அவரிடம் பேசத்தயார் என்று ஆர்த்தி பதிலுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இப்படி மாறிமாறி இருவரும் விவாகரத்து பற்றி பேசுகையில், இதுபற்றி விமர்சகர்கள் கண்டபடி பேசி வந்தனர். ஜெயம் ரவிக்கு பாடகி ஒருவருடன் தொடர்பு என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது. இதற்கு ஜெயம் ரவி அப்படியெல்லாம் கிடையாது என்று விளக்கம் கொடுத்தார்.
ஹன்சிகா
இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் ஜெயம் ரவி, நடிகை ஹன்சிகா பற்றி சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அதில் ஹன்சிகாவுடன் மூன்று படங்கள் நடித்திருக்கிறேன். படத்தில் என்னை பார்த்து அவர்கள் ஒரு டயலாக் சொல்லுவார்கள். உன் முகத்தை இடது பக்கம் பார்த்தால் ரொமான்ஸ் முகம், வலது பக்கம் பார்த்தால் ஆக்ஷன் முகம் என்று பேசியிருப்பார்கள்.
அந்த டயலாக்கை எடுத்து முடித்ததும் என்னிடம் இன்னொரு விஷயத்தை சொன்னார்கள். உன் முகத்தை ஸ்டிரைட்டா பார்த்தால் காமெடி முகம் என்று சொன்னார்கள். இப்படி என்னை கலாய்க்கக் கூடிய ஹீரொயின் அவர்கள் தான் என்று ஜெயம் ரவி அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.