அந்த காட்சிய உணர்ந்து நடிச்சேன்!! திருமணத்திற்கு முன் ஜெயம் ரவி செயலால் கடுப்பாகிய மனைவி..
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் மோகன் ராஜாவின் தம்பியாக ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் ஜெயம் ரவி. இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தப்பின் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் ஜெயம் ரவி.
இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்த ஜெயம் ரவி சமீபத்தில் பொன்னியின் செலவன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார். ஜெயம் ரவி கடந்த 2009ல் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.
மகன் ஆரவ் ரவியை டிக்டிக்டிக் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் போட்டோஷூட் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் மனைவி ஆர்த்தியுடன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது படங்களில் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்தது பற்றி ஆர்த்தியும் ஜெயம்ரவியும் காமெடியாக பேசியுள்ளனர்.
தாம் தூம் படத்தில் ஒரு பாடலில் கங்கனா ரணாவத்துடன் ரொமான்ஸ் செய்த போது எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது. அப்போது எங்களுக்கு கல்யாணம் கூட ஆகவில்லை என்று ஆர்த்தி கூறியுள்ளார். உணர்ந்து கேரக்டராகவே நடிச்சி இருந்தேன் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.