நயன்தாராவுக்கு ஜோடி!! சீட்டு குலுக்கி போட்டு செலண்ட் ஆன ஹீரோ...
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. ஜவான் படத்திற்கு பின் கன்னடம் - ஆங்கில மொழியில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கவும் இருக்கிறார். சமீபகாலமாக நயன் தாரா பற்றி நெகட்டிவ் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
பாஸ் என்கிற பாஸ்கரன்
நடிகர் ஜீவா, நயன் தாராவுடன் ஒருசில படங்களில் நடித்து வந்தார். இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் 2010 ரொமாண்டிக் காமெடி ஜார்னரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இப்படத்தில் நயன் தாரா கதாநாயகியாகவும் ஆர்யா ஹீரோவாகவும் நடித்திருப்பார். ஜீவா மற்றும் ஷகீலா இருவரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் முதலில் இயக்குநர் ராஜேஷ் இயக்கிய முதல் பட ஹீரோவா ஜீவாவை வைத்து தான் எடுக்கலாம் என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். ஆனால் ராஜேஷ் ஆர்யாவை மனதில் வைத்து இந்த கதையை எழுதியதாக கூறியிருக்கிறார். ஆர்யா - ஜீவா ஆகிய இருவரும் இக்கதைக்கு ஓகே சொன்ன நிலையில், அந்த ஹீரோ ரோலுக்கு யாரை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தில் இருந்துள்ளனர்.
இப்படியிருக்க தயாரிப்பாளர், இருவருடைய பெயரையும் சீட்டில் எழுதி போட்டு தேர்வு செய்யலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். அதன்படி இருவரின் பெயரை சீட்டில் எழுதிப்போட்டு எடுத்ததில் ஆர்யா பெயர் வந்திருக்கிறது. இதன்பின் நயன் தாராவுக்கு ஜோடியாக ஆர்யா நடித்திருக்கிறார். இந்த சீக்ரெட் விஷயத்தை நடிகர் ஜீவா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.