10 வருட உறவு!! 61 வயதில் 51 வயதானவரை திருமணம் செய்த பிரபல நடிகர்..
கியானு ரீவ்ஸ்
உலகில் அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் கியானு ரீவ்ஸ். பிரபல ஹாலிவுட் ஃபிரான்ஸிஸ்களான மார்வல் டிசி உள்ளிட்டவற்றின் கீழ் வராத நடிகர்களில் ஒருவராக இருந்து மிகப்பெரிய ஃபேன் ஃபாலோயர்களை உள்ளடக்கியவர் தான் கியானு ரீவ்ஸ்.
ஜான் விக் என்ற கேரக்டரில் நடித்த இவர், ஜெனிஃபர் சைம் என்பவரை காதலித்து வந்தார். இவர் 2001ல் தனது 28வது வயதில் கார் விபத்தில் இறந்தார். இதற்கு சில வாரங்களுக்கு முன் தான் கியானுவுக்கும் ஜெனிஃபருக்கும் பிறந்த குழந்தை இறந்திருந்தது.
இப்படி ஒரேநேரத்தில் தனக்கு பிடித்த இரண்டு உயிர்களை கியானு ரீவ்ஸ் இழந்து உடைந்து போய்விட்டார். இத்தனை ஆண்டுகளாக சிங்கிளாக இருந்து வந்த கியானு, யாரையும் டேட்டிங் செய்யாமலும் இருந்து வந்தார்.
சமீபத்தில் அலெக்ஸாண்ட்ரா கிராண்ட் என்பவருடன் காதல் உறவில் இருந்து வந்தார் என்று கூறப்பட்டது. 2009ல் ஆரம்பித்த இந்த நட்பு, அப்படியே 10 வருடங்கள் தொடர்ந்து காதல் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தி வந்தனர்.
அலெக்ஸாண்ட்ரா கிராண்ட்
இந்நிலையில் கியானு ரீவ்ஸ், காதலி அலெக்ஸாண்ட்ரா கிராண்டை ரகசியமாக ஐரோப்பாவில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. அலெக்ஸாண்ட்ராவிற்கு 52 வயதாகிறது.
ஏற்கனவே இரட்டை பெண் குழந்தைகளுக்கு தாயான அலெக்ஸாண்ட்ரா, தங்களின் திருமண உறவு குறித்த செய்தியை பிரைவேட்டாக வைத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.