ஒரேஒரு ராத்திரியில் தலைக்கீழாக மாறிய பாடகியின் வாழ்க்கை! எல்லாம் அனீருத்தான் காரணம்!!
இசையமைப்பாளராக இருந்து பல கலைஞர்களை உருவாக்கி அறிமுகப்படுத்தி வருபவர் ஏஆர் ரகுமான். கொடிக்கட்டி பறந்த இளையராஜாவிற்கு கடிவாளம் போட்டு ரகுமானை அறிமுகம் செய்து பிரபலப்படுத்தினார் மணிரத்னம். அதன்மூலம் அறிமுகமாகிய பின்னணி பாடகி பாடகர்கள் வரிசையில் இருந்தவர் ஜோனிடா காந்தி.
பல படங்களில் பாடிய ஜோனிடா தற்போது அனிரூத் இசையில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக சம்பளமும் அதிகமாக கிடைக்கிறதாம். இதற்கு காரணம் இருவரின் காதல் கிசுகிசுவும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ஹலமிதி ஹபிபோ என்ற அரபிக் குத்து பாடலை பாடி ஒரே இரவில் படத்தின் நடிகையை விட அதிகமாக கவரப்பட்டு வந்தார் ஜோனிடா காந்தி.
இதுபற்றி பல மீம்ஸ்கள் வெளியாகி வைரலானது. இதன் மூலம் ஒரே ராத்திரியில் பேமஸ் ஆனதால் நயன் தாரா விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளாராம். இதனால் பாடகி ஜோனிடா காந்தி பல போட்டோஷூட்களை எடுக்க ஆரம்பித்து தமிழ் சினிமாவை ஆக்கிரமிப்பு செய்ய முடிவெடுத்து வருகிறாராம்.