அஜித் நடிகரா? அப்புறம் ஏன் விருது!! பிரபலம் அதிரடி கேள்வி
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் ரிலீஸ் செய்வதற்கு ரெடியாக உள்ளது.
சினிமா மட்டுமின்றி தற்போது தனக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார் அஜித். சமீபத்தில் இவர் துபாயில் நடந்த கார் ரேஸில் 3ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.
சூழல் இவ்வாறு இருக்க அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கியிருக்கிறது ஒன்றிய அரசு. இதை பாராட்டி சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ஏன் விருது?
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான அந்தணன் அஜித் குறித்து பேசிய விஷயம் சர்ச்சைக்கு உள்ளானது. அதில், " அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்ற செய்தியை கேட்ட உடன் எனக்கு ஒரு பயம் வந்தது.
இவர் தான் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லமாட்டாரே. அந்த சூழலில் இதற்கும் போகாமல் விட்டுவிட்டால் பிரச்சனை ஆகிவிடும் இல்லையா?.
அஜித்துக்கு எந்த அடிப்படையில் இந்து விருது வழங்கப்படுகிறது என்று தெரியவில்லை. அவர் சிறந்த நடிகர் என்ற அடிப்படையில் விருது வழங்கப்பட்டால் அவரே இந்த விருதை ஏற்றுக்கொள்ள கூடாது.
ஏனெனில் அவரே தன்னை ஒரு நடிகராக நினைக்கவில்லை. அவரை வைத்து படம் எடுபவர்களை அவர் மதிப்பதும் இல்லை.
ஒரு இசை வெளியீட்டு விழாவில் கூட அவர் பங்குபெற்றது இல்லை. அவ்வாறு இருக்கும்போது இந்த விருதை ஏன் அஜித்திற்கு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.