கூன் போட்டு நடித்த காதல் மன்னன்!! அடையாளம் காணாமல் ஜெமினி கணேசனை விமர்சித்த பத்திரிக்கையாளர்..
தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்ஜிஆர் ஆகிய ஜாம்பவான்கள் கொடிக்கட்டி பறந்த காலக்கட்டத்தில் தனக்கென ஒரு டிராக்கை பயன்படுத்தி கோலோச்சிக்கொண்டிருந்தார் ஜெமினி கணேசன். அப்படி பலவிதமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெமினி கணேசன் இரு வேடங்களில் நடித்து வெளியான ஒரு படத்தினை பார்த்த பத்திரிக்கையாளர் விமர்சித்து பேசிய சம்பவம் பாலிவுட்டில் நடந்துள்ளது.
1955ல் ஜெமினி கணேசன், நடிகை அஞ்சலி தேவி உள்ளிட்ட பல நடித்த படம் கணவனே கண் கண்ட தெய்வம். இப்படத்தில் ஜெமினி கணேசன் போர் வீரனாகவும் ஒரு காட்சியில் நாகராணி என்ற மங்கையின் சாபத்தால் கூன் விழுந்தவராக மாறிய ரோலிலும் நடித்திருந்தார். இரு கதாபாத்திரத்திலும் ஜெமினி கணேசன் சிறப்பாக நடித்திருந்தார்.
இப்படத்தினை இந்தியில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளர் முடிவு செய்ய ஜெமினி கணேசன் ரோலில் நடிக்க திலிப் குமாரை அணுகி படத்தை பார்க்க வைத்துள்ளார். ஆனால் அவரே சிறப்பாக நடித்திருக்கிறார், ஜெமினி கணேசனை நடிக்க வையுங்கள் என்று கூறியிருக்கிறார் திலிப் குமார். அதன்பின், இந்தியில் ஜெமினி கணேசன் அதே இரு ரோலில் நடித்துள்ளார்.
இப்படத்தினை பார்க்க பிரிவ்யூ ஷோ பாலிவுட் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது. ஆனால் அப்படத்தினை பார்த்த ஒரு பத்திரிக்கையாளர் கூன் விழுந்தவராக நடித்த நடிகர் சிறப்பாக நடித்தார் என்றும் போர் வீரனாக நடித்தவர் சுமாராக நடித்தார் என்றும் விமர்சித்திருக்கிறார். ஆனால் கூன் விழுந்தவரும் போர் வீரனாக நடித்தவரும் ஜெமினிகணேசன் தான் என்று அடையாளம் காணமுடியாமல் அப்படி விமர்சித்ததுள்ளராம்.