ப்ரா விஷயத்தில் மூடி மறைப்பது ஆபத்து!! வனிதாவின் காட்சிக்கு ஜோவிகா விளக்கம்..
ஜோவிகா
நடிகை வனிதா மகள் ஜோவிகா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து தன்னுடைய அம்மா வனிதாவை வைத்து மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமாகினார்.

அந்த படம் ஓடிடியில் வெளியாகிய நிலையில், படத்தில் வனிதா, பிரா அணிந்து வரும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அக்காட்சியை பற்றித்தான் தற்போது அவருடைய மகள் ஜோவிகா பேசியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
ப்ரா விஷயத்தில்
ஜோவிகா பேசுகையில், பிரா கையில் எடுத்து வரும் காட்சி படத்தில் இருந்ததால் என்ன பெரியதாக நடந்துவிட்டது. அதைப்பற்றி நாம் வெளிப்படையாக பேசும்போது தவறாக தெரியாது.

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதைப்பற்றி பேசாமல் மூடி மறைக்கிறோமோ, அந்தளவுக்கு அதன்மீதான ஆர்வம் அதிகமாகும். அது இன்னும் அதிகமான ஆர்வத்தை உருவாக்கும். இன்னும் ஆபத்தானதாகக்கூட மாறலாம்.
அதைப்பற்றி வெளிப்படையாக பேச வேண்டும், ஏனென்றால் அது வெறும் ஓர் ஆடைதான் என்று பேசியுள்ளார் ஜோவிகா.