குஷி ஜோதிகாவாக மாறி டிவி ஷோவில் ஆட்டம் போட்ட ஜோவிதா...வீடியோ

Livingston Viral Video Sun TV Tamil TV Serials Tamil Actress
By Jai Sep 23, 2026 09:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் டாப் நடிகராக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார் நடிகர் லிவிங்ஸ்டர். இவருக்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் அவரது மகள் ஜோவிதா லிவிஸ்டன் சீரியலில் அறிமுகமாகி நடித்தும் வருகிறார்.

குஷி ஜோதிகாவாக மாறி டிவி ஷோவில் ஆட்டம் போட்ட ஜோவிதா...வீடியோ | Jovitaa Livingston Jothika Look Dance Video Viral

அருவி, பூவே உனக்காக, மெளன் பேசியதே போன்ற சீரியலில் நடித்து வந்த ஜோவிதா, சிறகுகள் என்ற சன் தொலைக்காட்சி சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

சிறப்பான வரவேற்பை பெற்று வரும் ஜோவிதா, நாங்க ரெடி நீங்க ரெடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். தன்னுடைய பாடல் திறமையை நிரூபித்த ஜோவிகா, தற்போது நடனத்திலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

குஷி படத்தின் மேகம் கருக்குது என்ற பாடலுக்கு ஜோதிகா லுக்கில் மழையில் நனைந்தபடி ஆட்டம் போட்டுள்ளார். அவரின் அந்த ஆட்டத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். ஒருசிலர் டிவி ஷோவிலும் இப்படியா என்று கலாய்த்தும் வருகிறார்கள்.