மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துகொண்ட ஜாய் கிரிஸில்டாவின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சமையல் கலை வல்லுநர் மாதம்பட்டி ரங்கராஜ். 2019ம் ஆண்டு தமிழில் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
இந்த நிலையில், இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். ஜாய் கிரிஸில்டா விஜய்யின் ஜில்லா, ரவி மோகனின் மிருதன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் கடந்த 2018ம் ஆண்டு பிரபல இயக்குநர் ஜே ஜே ப்ரெட்டிக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜே ஜே ப்ரெட்ரிக் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
திருமணம் ஆன 5 ஆண்டுகளில், அதாவது கடந்த 2023ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா தனது முதல் கணவர் உடன் எடுத்துக்கொண்ட போட்டோ நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க..
