CWC சூட்டிங்கில் கேரவன்ல வெச்சு அடிச்சாரு!! மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவி ஜாய் கிரிஸில்டா ஓபன்..
ஜாய் கிரிஸில்டா
பிரபல சமையல் கலைஞராக திகழ்ந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் மனைவி ஜாய் கிரிஸில்டா குறித்த செய்திகள் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது. ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறிய பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் தன்னுடைய அம்மாவுடன் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டிக்கொடுத்துள்ளார் ஜாய் கிரிஸில்டா.
அதில், 4 மாதம் கர்ப்பமாக இருந்தபோது, கர்ப்பத்தை கலைக்க சொல்லும்போது நான் மாட்டேன் என்று சொன்னதுக்கு என்னை வீட்டில் வைத்து அடித்தார், அதுக்கான ஹாஸ்பிட்டல் ரிப்போர்ட் இருக்கு என்று கூற, அதற்கு அவர் அம்மா, அதனால் அவள் காது கேட்காமல் போனது, தலையில் பலத்த அடிப்பட்டது என்று கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.
CWC கேரவனின் அடிச்சாரு
மேலும், அவர் அடித்ததில் என் கண்ணில் பிரச்சனை வந்தது, இன்னும் சரியாக காது காட்கவில்லை, வீட்டில் அடிப்பாரு, ஜூன் மாதம் இதேபோல் சண்டைப்போட்டு சென்றுவிட்டார். குக் வித் கோமாளி கேரவனுக்கு சென்று பார்த்தேன்.
அப்போது கேரவனில் அவரது மேனேஜர் சப்போர்ட்டுடன் என்னை அடித்தார். யாரும் தடுக்கவில்லை, அப்பவும் அவரை வீட்டிற்கு வரச்சொன்னேன். மகன் முன் என் வீட்டில் அடித்தார். இதை என் மகன், அப்பா அடித்தார்னு அம்மாவிடம் சொல்லிவிட்டான். அதன்பின் வீட்டுக்கு வந்ததும், உனக்கு நான் வேண்டுமா? குழந்தை வேண்டுமா?. குழந்தை வேண்டும்னா நான் வீட்டைவிட்டு போறேன், உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கேரக்டரை கொச்சப்படுத்தி
பொருளாதார ரீதியாக என்னை லாக் செய்தார். அதன்பின் நானும் ஸ்டாங்க்-ஆக இருந்தேன். என் கேரக்டரை கொச்சப்படுத்தி, கேவலப்படுத்தி பேசுனாங்க. நம்பர் 1 இடத்தில் இருந்தேன். பல படங்களில் வேலை செய்து பிஸியாக இருந்தேன். டாப் இடத்தில் இருக்கும்போது ஒரு பொண்ணை எப்படி பேசுவாங்களோ அப்படி பேசுனாங்க. ஒரு பொண்ணு சம்பாதித்தால் படுத்துதான் சம்பாதிச்சாளா?.
அந்த ஆடி காரை, என்னுடைய கல்யாணத்தில் போட்ட நகைகளை வைத்து தான் நான் வாங்கினேன். என்னை அப்படி மோசமாக எழுதிருங்களே, ரங்கராஜுக்கு இந்த பொண்ணு இத்தனையாவது என்று பேசும்போது அவருடன் இருந்தேன். ஆனால் இப்போது என்னை இப்படி நடத்துகிறார்கள். என்னைப்பற்றி மோசமாக எழுத காசு கொடுக்கிறார்கள் என்று கோபத்தில் பேசியுள்ளார் ஜாய் கிரிஸில்டா.