10 பெண்களை ஏமாற்றி இருக்கிறார் ரங்கராஜ்!! பரபரப்பை ஏற்படுத்தும் ஜாய் கிரிஸில்டா...
மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரின் இரண்டாம் மனைவி ஜாய் கிரிஸில்டா பற்றிய விவகாரம் தான் ஒன்றரை மாதங்களாக டாப் ஹைலெட் நியூஸாக இருந்து வருகிறது. தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்ததோடு, அவருடன் நெருக்கமாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை ஜாய் இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பலர் விமர்சித்து பேசியநிலையில், ஜாய் கிரிசில்டாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். ஜாய் கிரிசில்டா என்னை ஏமாற்றிவிட்டார். நான் வைத்திருந்த நம்பிக்கையை ஜாய் கிரிசில்டா தவறாக பயன்படுத்தினார்.
ஜாய் கிரிடில்டாவின் பேட்டியால் எனது குழந்தைகள் பாதிப்பு என்று உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் வாதிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. ஜாய் கிரிஸில்டா சார்பில் அவரது வழக்கறிஞர், மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒன்றரை மாதமாகியும் அந்த புகார் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை என்ற் கூறியிருக்கிறார்.
10 பெண்களை ஏமாற்றி இருக்கிறார்
தற்போது தனது வழக்கறிஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சுதாவுடன் இணைந்து சேப்பாக்கம் மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றினை கொடுத்துள்ளார் ஜாய். பின் செய்தியாளர்களை சந்தித்தவர், என்னைப்போல் 10 பெண்களை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியுள்ளார். தனக்கும் தன் குழுந்தைக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் ரங்கராஜ் தான் பொறுப்பு ஏற்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், நான் மருத்துவமனைக்கு எப்போதெல்லாம் செல்கிறேனோ, குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் எங்கே என்று மருத்துவர் கேட்பதாகவும் அதனால் என்னால் அடக்கமுடியாத அழுகை வருவதாகவும் கர்மா மீண்டும் அவருக்கே வரும் என்றும் ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றினை பக்ரிந்துள்ளார்.
