4600 கோடி சொத்துமதிப்பு!! இந்தியாவின் டாப் பணக்கார நடிகை யார் தெரியுமா?
Bollywood
Indian Actress
Actress
Net worth
By Edward
இந்தியாவின் டாப் பணக்கார நடிகை
இந்தியாவை சேர்ந்த பல நடிகைகள் நடித்து பல தொழில்கள் செய்து கோடிகளில் சம்பாதித்து வருகிறார்கள். அப்படி இந்திய சினிமாவில் மிகப்பெரிய பணக்கார நடிகைகள் லிஸ்ட்டில் டாப்பில் இருப்பவர் தான் நடிகை ஜூஹி சாவ்லா.
கயாமத் சே கயாமத் தக் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த ஜூஹி சே சாவ்லா, ஜெண்டில்மேன், டார், ராம் ஜானே, யெஸ் பாஸ், போல் ரதா போல் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார்.
ஜூஹி சாவ்லா
ஆகஸ்ட் 2024ல் ஹருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2024 பதிப்பில் வெளியிட்ட லிஸ்ட்டில், ஜூஹி சாவ்லாவின் சொத்து சுமார் ரூ. 4600 கோடி இருக்கிறது என்று கூறப்படுகிறது.
முன்னணி பாலிவுட் நடிகையாக இருக்கும் ஆலியா பட், தீபிகா படுகோன், கேத்ரீனா கைஃப், ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகளின் சொத்து மதிப்பைவிட இது அதிகம் என்று கூறப்படுகிறது.