ஜோதிகா பேசிய சர்ச்சை! வெடிக்க காரணமாக இருந்த உண்மை இதுதானாம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் இருந்து வருபவர் நடிகை ஜோதிகா. வாலி படத்தில் ஆரம்பித்து தற்போதைய உடன் பிறப்பே படம் வரை இன்னும் இளமையுடன் இருப்பது பலருக்கு ஆச்சரியம் தான். இந்நிலையில் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு ரிஎண்ட்ரி கொடுக்கும் போது விருது விழா ஒன்றில் தஞ்சை பெரிய கோவில் பற்றி சர்ச்சையாக பேசினார் என்று செய்திகள் வைரலானது.
கோயில்களுக்கு கொடுக்கும் பணத்தை கொண்டு மருத்துவமனைக்கும் பள்ளிக்கும் செலவிடலாம் என்ற கருத்தினை கூறியதுதான். அவர் அதை கூறியதற்கு என்ன காரணம் என்று சில மாதங்களுக்கு முன் தேடப்பட்டது. இதுகுறித்து உடன்பிறப்பே படத்தின் இயக்குநர் இரா சரவணன் தெளிவுப்படுத்தியுள்ளார். உடன் பிறப்பே படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் அரசு சாரா மிராசுதார் மருத்துவமனையின் அருகில் நடைபெற்றது.
அப்போது ஜோதிகா அங்கிருந்த கர்ப்பிணி பெண் கஷ்டப்படுவதை பார்த்து அதிர்ந்தார். பின் மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதி கொடுத்து பக்கத்தில் இருக்கும் இடத்தினை சீரமைக்க கோரியிருந்தார். இதன் மூலம் ஆரசு தானாக முன்வந்து அந்த இடத்தினை சரிசெய்யும் போது பல பாம்புகள் இருந்துள்ளது. அப்படியான சூழ்நிலையை பார்த்து தான் ஜோதிகா தஞ்சாவூர் பற்றி பேசியிருந்தார் என்று கூறியுள்ளார் இயக்குநர்.
இதனால் பல மாற்றங்கள் நடந்துள்ளது என்று பலர் இதற்கு பாராட்டினையும் கூறி வருகிறார்கள். இந்த செய்தி தற்போது சென்று கொண்டிருக்கும் ஜெய் பீம் படத்தில் சூர்யா செய்த சில நல்ல விஷயங்களை போல் இதுவும் ஒன்று என்று ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.