திருமணத்திற்கு முன் நடிகையிடம் நெருக்கம் காட்டிய சூர்யா!! கனவுக்கன்னியை வெளிநாட்டுக்கு ஓடவிட்ட ஜோதிகா..
மும்பை நடிகையாக தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ஜோதிகா. சூர்யாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு குழந்தை பெற்று வளர்த்தப்பின் மீண்டு நடிப்பில் ஆர்வம் கொடுத்து நடித்து வருகிறார்.
மலையாளம் மற்றும் இந்தியில் முக்கிய ரோலில் நடித்து வரும் ஜோதிகா மும்பையில் வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. சூர்யாவும் சில காரணத்திற்காக மும்பையில் செட்டிலாகினாலும் அதற்கு முழு காரணம் ஜோதிகா தான் பிரித்து சென்றுவிட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
ஜோதிகா லைலா
திருமணத்திற்கு முன் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த ஜோதிகா லைலா மற்றும் ரம்பாவுடன் 3 ரோசஸ் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தினை ரம்பா தன் அண்ணனுடன் இணைந்து தயாரித்திருந்தார். அந்த சமயத்தில் லைலா மீது ஜோதிகா சில கருத்து வேறுபாட்டால் வாய் சண்டை போட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. அதற்கு காரணம் 3 ரோசஸ் படம் ஆரம்பித்த போது, ஜோதிகா சூர்யாவை காதலித்து வந்துள்ளார். அப்போது லைலா, சூர்யாவுடன் நெருக்கமாக பேசி வந்ததை பார்த்து தான் லைலா மீது சிடுசிடுவென இருந்துள்ளார். அந்த மன நிலையில் தான் லைலா அந்த படத்தினை முடித்திருக்கிறார்.
ரம்பா
பல பிரச்சனைகளுக்கு பின் 3 ரோசஸ் படம் 2003ல் வெளியாகி படுமோசமான நஷ்டத்தை ரம்பாவுக்கு கொடுத்தது. இதனால் படுதோல்வியையும் நிதி நெருக்கடியால் அந்த படத்திற்கு முன் நடிக்காமல் வெளிநாட்டுக்கு சென்று திருமணம் செய்து செட்டிலாகியிருக்கிறார் நடிகை ரம்பா. அந்த சமயத்தில் இந்த செய்தி மிகப்பெரியளவில் பேசப்பட்டது. அப்படியிருக்கும் போது தான் சூர்யா - ஜோதிகா திருமணம் 4 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது.