பாலிவுட்டில் எனக்கான கதவுகளை மூடினார்கள்..ஆனால் தென்னிந்தியாவில்!! நடிகை ஜோதிகா..
ஜோதிகா
தென்னிந்திய சினிமாவில் 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ள நடிகை தான் நடிகை ஜோதிகா. சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சினிமாவில் இருந்து விலகி இரு குழந்தைகளுக்கு தாயானார்.

தன் பிள்ளைகளை வளர்த்து, தற்போது வளர்ந்துள்ள நிலையில், சினிமாவில் மீண்டும் நடிக்க காலெடி எடுத்து வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் தமிழில் கவனம் செலுத்திய ஜோதிகா, மலையாளம், இந்தி மொழிப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள System என்ற அமேசான் பிரைம் படம் மே 22ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது, பேசிய ஜோதிகா, தென்னிந்திய சினிமா - பாலிவுட் சினிமா குறித்து பேசியுள்ளார்.

பாலிவுட்டில்
அதில், என்னுடைய முதல் படம் வணிகரீதியாக வெற்றி பெறாதபோது, பாலிவுட்டில் எனக்கான கதவுகள் மூடப்பட்டது. ஆனால், தென்னிந்திய சினிமா என்னுடைய உழைப்பை மதித்து எனக்கு அடுத்தடுத்து பல படங்களை வழங்கினார்கள். இதுதான் இரு திரையுலகத்திற்கும் இடையே நான் கண்ட முக்கியமான வித்தியாசம் என்று பேசியிருக்கிறார்.