சூர்யா - ஜோதிகாவின் 15 வயதான மகள் தியாவா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்திட்டாங்களே..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. கடந்த 2006 ஆம் ஆண்டு தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் நடிகை ஜோதிகா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்தினை பார்த்து வந்தார்.

தியா என்ற மகளும் தேவ் என்ற மகளை பெற்றெடுத்த ஜோதிகா அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்திய நிலையில், 36 வயதினிலே, மகளிர் மட்டும் போன்ற படங்கள் மூலம் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.
கிடைக்கும் நேரத்தில் மகள், மகனுடன் நேரத்தினை செலவிட்டு வரும் ஜோதிகா, சமீபத்தில் தன் குடும்பத்தின் ஒரு புதிய நாயை வாங்கியுள்ளதை புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகள் தியாவை பார்த்து இப்படி வளர்ந்துட்டாங்களே என்று ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
