9 கிலோ குறைத்த நடிகை ஜோதிகா!! பாலிவுட் போனது ஆளே மாறிட்டாங்க..

Jyothika Photoshoot Bollywood Tamil Actress Actress
By Edward Apr 02, 2025 06:30 AM GMT
Report

ஜோதிகா

நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான பின் நடிப்பில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். அதன்பின் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து நடிக்க வந்துள்ள ஜோதிகா, தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

9 கிலோ குறைத்த நடிகை ஜோதிகா!! பாலிவுட் போனது ஆளே மாறிட்டாங்க.. | Jyothika Weight Loss After Photoshoot Post Viral

சமீபத்தில் அவர் நடிப்பில் Dabba Cartel என்ற வெப் தொடரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். நடிகை ஜோதிகா, ராதிகா, ரம்யா கிருஷ்ணன், திரிஷா, டிடி உள்ளிட்ட பல நடிகைகள் மற்றும் தோழிகளுக்கு மதிய விருந்து அளித்திருந்தார்.

புகைப்படங்கள்

கடந்த 3 மாதங்களில் 9 கிலோ எடையை நடிகை ஜோதிகா குறைத்துள்ளார். இதற்கு வித்யா பாலனும் உதவியதாக ஜோதிகா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உடல் எடையை குறைத்ததோடு கிளாமர் லுக்கிற்கும் மாறியிருக்கிறார் ஜோதிகா. சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் வாய் பிளக்க வைத்திருக்கிறார்.