எம்ஜிஆர் இறந்து ஒரு வாரத்தில் ஏற்படவிருந்த விபரீதம்.. ஜெ, ஜானகியை உதறித்தள்ளிய பாக்யராஜ்...
இந்திய சினிமாவில் கமல், ரஜினி, அமிதாப் போன்றவர்களை இயக்கியதை போன்றே எம்ஜிஆரை வைத்து அவசர போலிஸ் 100 என்ற படத்தினை இயக்கியவர் கே பாக்யராஜ். ஜெயலலிதா அரசியலில் எப்படி வாரிசு என்று எம்ஜிஆர் அறிவித்தாரோ அதேபோல், சினிமாத்துறையில் பன்முகத்திறமை கொண்ட பாக்யராஜ் எம்ஜிஆரின் இரண்டாம் வாரிசாக இருந்தார்.
அரசியலில் அதனால் ஜெயலலிதா அசிங்கப்படுத்தப்பட்டு வந்தார். அதேபோல் பாக்யராஜுன் பல கஷ்டங்களை சந்தித்து வந்தார். இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியது, எம்ஜிஆர் உடல் நலக்குறைவால் ஒருமுறை அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஜெ - ஜானகி இரு பிரிவுகள்
அப்போது உடனே அமெரிக்கா விமானம் பிடித்து பார்க்க சென்ற போது அவரை நெருங்கவே விடவில்லையாம். பின் சோகத்தின் விளிம்பில் அவரது அறைக்கு செல்ல உடனெ எம்ஜிஆர் தர்ப்பில் ஓட்டலுக்கு வந்தவர் சார் எங்க போனீங்க உங்களை எம்ஜிஆர் உங்களை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கே பாக்யராஜ் அளித்த பேட்டியொன்றில், எம்ஜிஆர் அவர்கள் இறந்தப்பின், அவரின் மனைவி ஜானகி அவர்களும் மறைந்த ஜெயலலிதாவும் இருப்பிரிவுகளாக பிரிந்து, தன்னை சந்தித்து எங்கள் அணிகளில் சேரும்படி கேட்டுக்கொண்டனர்.
சம்பதம் தெரிவிக்காத பாக்யராஜ்
ஆனால், தலைவர் இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதுக்குள்ள இப்படியொரு கருத்து வேறுபாடு இருப்பது வெளியில் தெரிந்தால் கட்சிக்கு பிரச்சனையாகிவிடும். மனைவி ஜானகி அம்மா இருக்காங்க, அவங்களோடு சேர்ந்து கட்சி பொதுக்குழு வைத்து தேர்வு செய்யலாம். இதுதான் கட்சிக்கு நல்லது. இதில் நானும் கொம்பு சீவிட்டு போவது நல்லதல்ல என்று கூறியிருந்தாராம் கே பாக்யராஜ்.