நடிகை செருப்பால் அடித்தும் திருந்தல? பயில்வானை சுக்குநூறாக்கிய தயாரிப்பாளர்..
காமெடி நடிகராகவும் பத்திரிக்கையாளராகவும் தமிழ் சினிமாவில் திகழ்ந்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன்.குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த பயில்வான் அரசியல், சினிமா என பின்புலத்தினை சார்ந்து செயல்பட்டு வந்தார்.
சமீபகாலமாக யூடியூப் வழியாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பகிர்ந்து வருகிறார். அந்தரங்கத்தை கூறுவதாக நினைத்து நடிகர் நடிகைகளை பற்றிய தவறான கருத்துக்களை படுகேவளமாக பேசி வருகிறார்.
சமீபத்தில் நடிகை ராதிகா கூட கடற்கரை நடைபயற்சியின் போது பயில்வானை அடித்ததாக கூறப்பட்டது. இதனை மறுத்தும் ஒரு வீடியோவை பதிவிட்டார் பயில்வான்.
இந்நிலையில், பொய்யான தகவல்களை கூறுவதாக ஆபாசமாகவும் தரைக்குறைவாகவும் பேசி வருகிறார் பயில்வான் என்று தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவரும் தயாரிப்பாளருமான கே ராஜன் பயில்வான் ரங்கநாதன் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கு பயில்வான் ஒரு யூடியூப் சேனலில், என்னை யாரும் எதுவும் செய்யமுடியாது, என்னை தாக்க யாராவது வந்தார் அவர்களின் கழுத்தை அரிவாளால் அறுத்து விடுவேன் நான் தூத்துக்கிடிக்காரன் என்று மிரட்டி பேசியிருந்தார்.
இதனால் வன்முறையை தூண்டும் விதமாக அவர்மீது சில நடிகர் நடிகைகள் புகார் அளிக்க பயப்படுவதால் பயில்வான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் கே ராஜன்.