அவன் பல தயாரிப்பாளரை காலி செய்திருக்கிறான்!! மேடையில் செல்வராகவனை அசிங்கப்படுத்தி பிரபல தயாரிப்பாளர்.
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெய்ன்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவர்ன், மயக்கம் என்ன போன்ற வெற்றிப்படங்களை கொண்டு இயக்குனராக கொடிக்கட்டி வருபவர் இயக்குனர் செல்வராகவன்.

நானே வருவேன்
இவர் இயக்கத்தில் தன் தம்பி நடிகர் தனுஷை அறிமுகப்படுத்தி உச்சமடையச்செய்தவர் செல்வராகவன். 11 வருடம் கழித்து நானே வருவேன் படத்தின் மூலம் தனுஷுடன் இணைந்து படத்தினை எடுத்து வெளியிட்டார். இப்படம் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக 29 ஆம் தேதி செப்டம்பர் மாதம் வெளியானது. படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் பொன்னியின் செல்வன் படத்தினால் வசூலில் அடிவாங்கியது.

கே ராஜன்
இந்நிலையில், மூத்த தயாரிப்பாளராக திகழ்ந்து வரும் கே ராஜன் அவர்கள் கமல் ஹாசனை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியும் தயாரிப்பாளர்களை டாப் நடிகர்கள் மதிப்பதில்லை என்றும் கூறி வந்தார். மேலும் தயாரிப்பாளர்கள் படும் கஷ்டத்தினை பல மேடைகளில் பேசி வந்த கே ராஜன், ஒரு நிகழ்ச்சியில் செல்வராகவனை கேவலப்படுத்தி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
செல்வராகவனா, அவன் பல தயாரிப்பாளர் வாழ்க்கையை காலி செய்தவன். நல்ல நேரத்தில் எந்த பேரை சொல்ற என்றும் ஆயிரத்தில் ஒருவன் பட தயாரிப்பாளரை காலி செய்தவன் செல்வராகவன் என்று கூறியுள்ளார். மேலும் பல குடும்பத்தை பல இயக்குனர்கள் வாழ்க்கையை காலி செய்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.