ஹன்சிகா காலுக்கு கீழ கேமரா வெக்குறாங்க.. பத்திரிக்கையாளர்களை சீண்டிய தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக திகழ்ந்து வருபவர் கே ராஜன். சமீபகாலமாக பட விழாக்களில் கலந்து கொண்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசி அவர்கள் படும் கஷ்டங்களை எடுத்துரைத்து வருகிறார்.
விளாசி வரும் கே ராஜன்
மேலும் முன்னணி நடிகர்கள் நடிகைகள் வாங்கும் சம்பளத்தையும் கடுமையாக பேசி வருகிறார். எந்த விசயமானாலும் சரி டாப் நடிகர்களையும் விடாது தைரியமாக விளாசி வருகிறார். அப்படி சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் காசு போட்டு படம் எடுக்குற தயாரிப்பாளர்களுக்கா இந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சி. நடிகர் நடிகைகளின் பிரமோஷன் தானே அது. அதற்கு கூட வராமல் இருக்காங்க என்று பேசியிருந்தார்.
ஹன்சிகா மோத்வானி
இதனையடுத்து, சினிமா நிகழ்ச்சிக்கு பங்கேற்க நடிகை ஹன்சிகா மோத்வானி 6 மணி நிகழ்ச்சிக்கு 8.30 மணிக்கு வந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த பத்திரிக்கையாளர்களின் 10 கேமராமேன்கள் ஹன்சிகாவை சுற்றிக்கொண்டார்களாம்.
ஹன்சிகாவை பல கோணத்தில் அதுவும் காலுக்கு கீழே கேமராவை வைத்து மோசமாக புகைப்படங்களை எடுத்ததாக கூறியிருந்தார். இப்படி இவர்கள் செய்வதால் எப்படி அவர் மதிப்பார் என்று கேள்வியாக கேட்டுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன். ஆனால் தயாரிப்பாளர் ஓரமாக ஒதுங்கி நிற்கும் நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.