ஆணவத்தில் ஆடிய சரத்குமார்!! கோபத்தில் படப்பிடிப்பில் கடுமையாக திட்டிய இயக்குனர்..
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து ரஜினி, கமல், சரத்குமார், விஜய், அஜித், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கி சூப்பர் ஹிட் படத்தினை கொடுத்தவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் சித்ரா லட்சுமணன் அவர்களின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த கே எஸ் ரவிக்குமார், சரத்குமாரின் அட்டூழியம் குறித்து பகிர்ந்துள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்குனரான முதல் படமான புரியாத புதிர் படத்தில் சரத்குமாரை வைத்து இயக்கினார்.
அப்படத்தில், எனக்கும் சரத்குமாருக்கும் பெரிய தகராறு ஆனது. மாலை 6 மணி ஷூட்டிங்கிற்கு நள்ளிரவு 2 மணிக்கு வந்தால் எப்படி கோபம் வராமல் இருக்கும். கனல் கண்ணனை வைத்து சண்டை காட்சி எடுத்துட்டு இருக்கேன். அவர் வராததால டூப் ஷாட்டை வைத்து எவ்வளவு நேரம் எடுத்தோம்.
அதன்பின் 2 மணிக்கு வந்ததும், அவரை வர்றதா இருந்தால் வரசொல்லு, இல்லனா அவர் மூஞ்சை கூட டூப் போட்டு எடுத்துப்பேன் என்று கோபத்தில் கத்தினேன்.
நானும் அவரும் டென்ஷன்-ஆக இருந்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சண்டைக்கு பின் இருவரும் நட்பாக பழகி ஒன்றாகிவிட்டோம் என்று கே எஸ் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.