சக நடிகர் நடிகைகளை வளரவிடாமல் தடுக்கிறாரா கமல் ஹாசன்.. உண்மையை நிரூபித்த நடிகர்
தமிழ் திரையுலகில் 60 ஆண்டு காலமாக கலை பயணத்தை ஆற்றி வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். தன்னுடன் நடிக்கும் கலைஞர்களை மரியாதையுடன் நடித்துவார் கமல் என்று கூறுபவர்கள் மத்தியில் கமல் சுயநலவாதியாக சக நடிகர்களை வளரவிடமாட்டார் என்ற கருத்துக்களும் பரவி வருகிறது.
காதல் சுகுமார்
அவரை எதிர்த்து பலர் சர்ச்சைகளாக கூறி வந்தனர் இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
நடிகர் பரத், நடிகை சந்தியா நடித்த இப்படத்திற்கு பிறகு காதல் சந்தியா, காதல் பரத் என்று கூப்பிடுவதை போன்று முக்கிய ரோலில் நடித்த சுகுமார், காதல் சுகுமார் என்று கூப்பிடும் அளவிற்கு அடையாளப்படுத்தியது.
அப்படத்தில் நடித்த சுகுமார் கமல் ஹாசன் தன்னை நடத்திய விதத்தை பகிர்ந்துள்ளார். கமல் ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படட்தின் வாய்ப்பு சுகுமாருக்கு வந்த அதேசமயத்தில் தான் காதல் படத்தின் வாய்ப்பு கிடைத்ததாம்.
கமல் ஹாசன் கொடுத்த வாய்ப்பு
அப்போது, கமல் சார் படத்தில் நடிப்பது முக்கியம் என்று காதல் படத்தினை நிராகரித்திருக்கிறார் சுகுமார். இதுதெரிந்த கமல் ஹாசன் உடனே சுகுமாரை வரவழைத்து, அப்படம் சங்கர் தயாரிக்கிறார் போய் நடியுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பின் அப்பட ஷூட் முடிந்து வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் ஷூட்டிலும் கலந்து கொண்டு நடித்ததாக கூறியுள்ளார்.
மேலும் சுகுமார் வரும் வரை அவரது காட்சிகள் எடுக்கப்படாமல், அவர் வந்ததும் அந்த காட்சிகள் எடுக்க கமல் ஹாசன் பார்த்துக்கொண்டாராம். தன்னுடைய வாய்ப்பு கமல் ஹாசன் கொடுத்த வாய்ப்பு என்று பேசியுள்ளார் காதல் சுகுமார்.