எது சொன்னாலும் நம்ப முடியலையே நித்தி? பரமசிவனை சந்தித்து வந்த நித்யானந்தா? கைலாசா தகவல்..

Nithyananda
By Edward Jun 25, 2022 06:00 PM GMT
Report

ஆன்மீகம் என்ற பெயரில் பலரை ஏமாற்றி காசு சம்பாதிக்கும் கூட்டத்தின் மத்தியில் ஆன்மீகத்தால் மோசடி, கடத்தல் என சிக்கி தலைமறைவாகி இருப்பவர் சுவாமி நித்யானந்தா. இந்தியாவில் இருந்து கைலாசா என்ற தனித்தீவினை உருவாக்கி தன் பக்தர்களுடன் தலைமறைவாகி இருக்கிறார் நித்யானந்தா.

சில வருடங்களுக்கு முன் நடிகர் ரஞ்சிதாவுடன் தனிமையில் இருந்த வீடியோக்கள் கூட வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியும், பெண் வெளிநாட்டு பக்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நித்யானந்தாவுக்கு என்ன ஆச்சி

இதைதொடர்ந்து மத்திட ஆப்பிரிக்கா நாடான கனாவிற்கு பக்கத்தில் கைலாசா நாட்டினுடன் உறவை மேம்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் சில மாதங்களாக நித்யானந்தா உடல் நிலை சரியில்லாமல் கோமா நிலையில் உள்ளதாக சில புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகியது.

நித்யானந்தா மற்றும் கைலாசத்தீவும் இருக்கிறதா இல்லையே என்று நம்பலாமா வேண்டாமா என்று நினைக்கும் அளவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தியும் வருகிறது. அதேசமயம் நித்யானந்தாவுக்கு 27 டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது.

பரமசிவனை சந்தித்தாரா 

தற்போது என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. எனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறியிருந்தார் நித்யானந்தா. இதையும் மறுத்த நித்யானந்தா தான் பரம சிவனை சந்தித்துவிட்டு வருவதாகவும் அதன் ஆன்மீக வகுப்புகளை எடுப்பேன் என கூறியுள்ளது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அது எப்படி பரம சிவனை சந்தித்திருப்பார் அங்கும் போட்டோ எடுத்தாரா என்று நித்யானந்தாவை கலாய்த்து வருகிறார்கள்.