நடிப்புக்கு டாடா காட்டி அதில் களமிறங்குகிறாரா காஜல் அகர்வால்..
காஜல் அகர்வால்
ஹிந்தி பக்கத்தில் இருந்து தென்னிந்திய சினிமா பக்கம் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான காஜல் அகர்வால், தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்றார்.
அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்த நேரத்தில் காஜல், கடந்த 2020ம் ஆண்டு கௌதம் கிச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பின் காஜல் அகர்வால் சில படங்களே கமிட்டாகி நடிக்கிறார்.
நடிப்பை தாண்டி சொந்தமாகவும் தொழில் நடத்தி வரும் காஜல் அகர்வால், தற்போது சினிமாவில் வேறொரு விஷயத்தில் களமிறங்க போவதாக கூறப்படுகிறது.
அதாவது நடிப்புக்கு டாடா காட்டிவிட்டு அவர் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளன.