கணவருடன் சேர்ந்து குடிக்கு அடிமையாகிய நடிகை காஜல்! சர்ச்சையாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். டாப் நடிகையாக கோடியில் ஜொலித்த சமயத்தில், தான் காதலித்து வந்த கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஒரு வருடமான நிலையில் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இதனால் பல படங்களில் கமிட்டாகி இருந்த காஜல் அப்படங்களில் இருந்து வெளியேறியுள்ளார். குறிப்பாக இந்தியன் 2 படப்பிடிப்பு பாதி முடித்துவிட்டு நடிக்க முடியாது என்று விலகி இருக்கிறார்.
இந்நிலையில் கணவருடன் எப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் காஜல் மது அருந்தி போஸ் கொடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது மதுவுக்கு விளம்பரம் கொடுக்கும் விதமாக கணவர் மது பாட்டிலை கையில் வைத்தபடியும் கெளதம் தோலில் சாய்ந்தபடியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து திருமணமாகி கணவருடன் சேர்ந்து குடிக்கு அடிமையாகி விட்டீர்களா என்று கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.