சூப்பர் ஸ்டாரை தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ராய்!! வில்லியாக மாறிய காஜல் அகர்வால்...
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால் கடந்த 2019ல் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார்.
தற்போது மீண்டும் கமிட்டாகிய படங்களில் பிஸியாக நடித்தும் வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை இயக்கவுள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க வைக்கலாம் என்று யோசித்து நடிகை ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராய், சில காரணங்களால் அதை நிராகரித்துள்ளார். அவருக்கு பதிலாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி கமிட் செய்திருக்கிறார்கள்.

நடிப்பு மட்டும் தான் கேவலம்னு நினைச்சேன், அறிவும் கம்மிதான் போல!..கீர்த்தி சுரேஷை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
அப்படத்தில் வில்லியாக நடிக்க தான் காஜல் அகர்வாலிடம் கேட்டிருக்கிறாராம் ராஜமெளலி. ஏற்கனவே ராஜமெளலி இயக்கத்தில் மகதீரா (மாவீரன்) படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானார் காஜல்.
அதுவும் வில்லியாக நடிக்க இருப்பதால் பலரின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரால் முடியாமல் போக ரம்யா கிருஷ்ணனை கமிட் செய்திருந்தார். அதேபோல் ஐஸ்வர்யா ராய் மறுத்த கதாபாத்திரத்தில் காஜல் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.