மகனுடன் நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்!! ஷாக்காகும் ரசிகர்கள்.

Kajal Aggarwal
By Dhiviyarajan Feb 04, 2023 04:18 PM GMT
Report

காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். கடைசியாக தமிழில் 'ஹே சினமிக்கா' படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 -ல் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 108-வது படத்தில் நடிக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை

நீச்சல் குளம்

காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து 2020 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாதத்திற்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ.