மகனுக்காக இப்படியொரு முடிவெடுத்த நடிகை காஜல் அகர்வால்?
Kajal Aggarwal
Indian Actress
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்த காஜல் இந்தியன்2 உள்ளிட்ட படங்களில் இருந்து விலகினார்.
கடந்த ஆண்டு கர்ப்பமானதை உறுதி செய்த காஜல் அகர்வால் ஏப்ரல் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சில தினங்களுக்கு முன்பு காஜல் மகனின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தன் குழந்தையை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் பார்த்துக்கொள்ள ஒரு வருடத்திற்கு படங்களில் நடிக்க முடியாது என்று கூறி வருகிறாராம். தன்னிடம் கால்ஷீட் கேட்பவர்களிடம் மகனை பார்த்துக்கொள்ள நேரம் வேண்டும் அதனால் ஒரு வருடம் நடிக்க போவதில்லை என்று கூறி அனுப்பி விடுகிறாராம்.