கருப்பை வைத்து சமாளிக்கும் மாரி செல்வராஜ், கென் கருணாஸ்!! நடிகை காஜல் பசுபதி கேள்வி..

Gossip Today Mari Selvaraj Actress Ken Karunas
By Edward Apr 16, 2026 03:00 PM GMT
Report

இயக்குநர் மாரிசெல்வராஜ் பற்றி சொல்லப்போனால், சமூக கருத்துக்களை மையப்படுத்திய படங்களை இயக்கி வருபவர். பரிமேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை அக்கறை கொண்ட இயக்குநராக இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அப்படி இருந்தாலும் அவரது படங்கள் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.

கருப்பை வைத்து சமாளிக்கும் மாரி செல்வராஜ், கென் கருணாஸ்!! நடிகை காஜல் பசுபதி கேள்வி.. | Kajal Pasupathi Questions Mari Selvaraj Tamil Act

இந்நிலையில், மாரி செல்வராஜ் அளித்த பேட்டியொன்றில் தன் படங்களில் ஏன் பிறமாநில நடிகைகள் அதிகமாக இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்கிறேன், அதை நான் முடிவு செய்ய வேண்டும். ஊனமுற்றோர் ரோலில் ஒருவரை நடிக்க வைக்க, அவர் ஊனமுற்றவராக இருக்க வேண்டியது இல்லை என்று தன்னுடைய படங்களில் கதாநாயகிகள் தேர்வு குறித்து விளக்கம் அளித்ததை, நடிகை காஜல் பசுபதி விமர்சித்துள்ளார்.

காஜல் பசுபதி பேசுகையில், தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு தராததற்கு இப்படியொரு ஒப்பீட்டை கூறுவது சரியா? கருப்பு நிறத்தை ஊனம் என்பதுபோல் எடுத்துக்காட்டாக சொல்லுவது என்ன அர்த்தம். தமிழில் திறமையாக நடிகைகள் குறைவா? இல்லை அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததா? என்று பேசியுள்ளார். மேலும் கென் கருணாஸ் கூறிய கருத்தை முன்வைத்துள்ளார்.

[H720AB

நான் எனக்கு ஹீரோயினாக நடிக்க தமிழ் நடிகைகளிடம் கேட்டும் நடிக்க முடியாது என்று கூறியதாக கென் தெரிவித்தார். எத்தனை பேரிடம் கேட்டீர்கள்(கென்), சில பேரிடம் மட்டும் கேட்டுவிட்டு அதையே பொதுவாக சொல்லக்கூடாது. மற்றமொழி படங்களில் அந்த மாநில நடிகைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழில் மட்டும் தான் மலையாளம், தெலுங்கு, கன்னட நடிகைகள் வருகிறார்கள் என்று விமர்சித்துள்ளர் காஜல் பசுபதி.