விவாகரத்துக்கு பின் குடிகாரி, வாழாவெட்டி-ன்னு அம்மாகூட திட்டுவாங்க.. ஷகிலாவிடம் உண்மையை கூறிய நடிகை காஜல்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் 2005ல் வெளியான சிந்துபாத் சீரியல் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காஜல் பசுபதி. இதனைதொடர்ந்து கஸ்தூரி, அரசி, மானாடா மயிலாட நிகழ்ச்சி உள்ளிட்டவைகளில் நடித்து வந்தார். வெள்ளித்திரையில் வசூல் ராஜா எம்பிபிஎஸ், ட்ரீம், இதயதிருடன், டிஸ்யூம், பெருமாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.
விவாகரத்துக்கு காரணம்
அதன்பின் மாயை, அதிதி, இரும்புத்திரை, கோ, பழைய வண்ணாரம்ப்பேட்டை, கலகலப்பு 2, ஆயிரத்தில் இருவர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். நடன இயக்குனர் சேண்டியுடன் காதல் ஏற்பட்டு 2008ல் திருமணம் செய்து கொண்ட காஜல் பசுபதி நான்கே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
விவாகரத்துக்கு காரணம் என்னுடைய காதல் டார்ச்சர் தான் சேண்டி பிரிந்தார் என்று அவரே கூறியிருந்தார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட காஜல் 70வது நாளில் வெளியேற்றப்பட்டார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கருத்துக்களை பகிர்ந்து வரும் காஜல் நடிகை ஷகிலாவின் நேர்காணலில் பங்கேற்று பல உண்மைகளை பகிர்ந்துள்ளார்.

ட்ஜெஸ்ட்மெண்ட்
அதில் என்னை பார்ப்பவர்கள் எப்போது குடித்துக்கொண்டே இருப்பாள் என்றும் குடிகாரி என்றும் கூறுவார்கள். அதைவிட விவாகரத்துக்கு பின் தனிமையில் இருப்பதால் வாழாவெட்டி என்றும் கூப்பிடுவார்கள். இதை என் அம்மாவும் கூறுவார்கள்.
வாழ்க்கையை தொலைத்துவிட்டாள் என்ற ஆதங்கத்தால் தான் அப்படி கூறுவார் என்றும் கூறியுள்ளார். மேலும் வாய்ப்பு கொடுக்க அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கும் என்னை கூப்பிடுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு வேண்டாம் என்று உதறிவிட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வது பற்றி, ரொம்ப நல்ல பசங்களை எனக்கு பிடிக்கிறது கிடையாது. நான் குடிப்பேன், எப்போது தெரியுமா? பார்ட்டி, பப் என்று சென்றால் தான் குடிப்பேனே தவிர ஷூட்டிங், பேட்டியில் குடித்துவிட்டு வரமேட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
