மகனை வளர்த்து விட்டவரை ஒதுக்கிய SACயை காப்பாற்றிய ரஜினி.. பழி எல்லாம் விஜய்க்கு தான்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல் ஒரு இடத்திற்கு வரவேண்டும் என்று பலர் விரும்புவார்கள். அப்படி விரும்பி உச்ச நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். விஜய் அறிமுகமே தன் அப்பா எஸ் ஏ சந்திரசேகரின் படம் தான்.
முதல் இரு படங்கள் ஓரளவிற்கு ஓடினாலும் விஜய்யின் அப்பாவுக்கு நஷ்டத்தை கொடுத்தது. இதனால் எஸ் ஏ சி தன் இரு வீட்டினையும் விற்று கடனை அடைத்தார். அதன்பின் விஜய் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று எஸ் ஏ சந்திரசேகரிடம் கேட்டு இருக்கிறார்.

அதற்கு விஜய்யை எஸ் ஏ சி கண்டபடி பெல்ட்டால் அடித்திருக்கிறாராம். இதை தன் வீட்டில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களிடம் கூறியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த உயர்வுக்கு உதவியாக இருந்ததும் கலைஞானம் தான்.
ஒரு முறை எஸ் ஏ சந்திரசேகர் கலைஞானத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது விஜய்யை அடித்ததை பற்றி கேட்டு 3-வது படத்தினை இயக்கவும் தயாரிக்கவும் செய்ய எஸ் ஏ சி-யை சமாதானம் செய்திருக்கிறார். அப்போது எஸ் ஏ சி-யிடம் கதை இல்லாததால் என்னிடம் இருந்த கதையை அவரிடம் கொடுத்து இயக்க உதவி செய்திருக்கிறார்.

அப்படி ஆரம்பித்த விஜய்யின் சினிமா வாழ்க்கை தற்போது உச்சத்தை தொட்டுள்ளார். இதன்பின் விஜய் சென்னையில் பல வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டு வருவதா கலைஞானம் தெரிந்துள்ளார். அப்படி உதவி செய்த கலைஞானம் அவர்கள், சமீபத்தில் எஸ் ஏ சி-யை சந்தித்து வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு எஸ் ஏ சி, அது எல்லாம் எனக்கு தெரியாது. விஜய்யுடம் அவரது மனைவியும் தான் பார்த்துக்கொள்கிறார்கள். என்னால் ஒன்னும் செய்ய முடியாது என்று கைநழுவி இருக்கிறார். அப்போது தான் நான் கேட்காமலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்தார் என்று கலைஞானம் கூறியுள்ளார்.